ஜனாதிபதி தேர்தலுக்கு கட்டுப்பணம் செலுத்திய வேட்பாளர்களின் விபரம்



2024 ஜனாதிபதி தேர்தலுக்கு இதுவரை ஆறு வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதுவரை ரணில் விக்ரமசிங்க, சரத் கீர்த்திரத்ன, ஓஷல ஹேரத், ஏ.எஸ்.பி.லியனகே, சஜித் பிரேமதாச மற்றும் பி.டபிள்யூ.எஸ்.கே.பண்டாரநாயக்க ஆகியோர் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர்.


2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இதற்கமைய எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 14ஆம் திகதி வரையில் ஜனாதிபதி தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்துவதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.  


ஜனாதிபதி தேர்தலுக்கான கட்டுப்பணத்தை போட்டியிடும் வேட்பாளர்கள் விரைவில் செலுத்துமாறு தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.எல்.ஏ ரத்நாயக்க கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை