தென்னிந்திய நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின்(TVK) தலைவருமான விஜய் தனது கட்சி கொடியை நாளை(22-08-2024) அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் கடந்த பெப்ரவரி மாதம், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி அரசியலில் பிரவேசித்தார்.
கட்சியின் முதல்மாநாடு நடைபெறவுள்ள நிலையில் அதற்கு முன்பாக, நாளை கட்சியின் கொடியை அறிமுகம் செய்யவுள்ளார்.
சென்னை பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் காலை 7 மணிக்கு மேல் இந்நிகழ்ச்சி தொடங்கவுள்ளது.
காலை 11 மணிக்குள்ளாக கட்சியின் கொடியை ஏற்ற விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
செப்டெம்பர் இறுதியில் விக்கிரவாண்டியில் மாநாடு நடக்கவுள்ளதாகவும் அதற்குள் கொடியை தமிழ்நாடு முழுவதும் பிரபலப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
விஜய்யின் பிறந்த தினமான 22ஆம் திகதி என்பதால் அத்தினத்தை இராசியான தினமாக எண்ணி தனது கட்சிக் கொடியையும் அத்தினத்திலேயே வெளியிடவுள்ளார்.
என இரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.