தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவளித்து முன்னெடுக்கப்படவுள்ள மாபெரும் பொது கூட்டம் இன்று



நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள தமிழ்ப் பொதுவேட்பாளரை ஆதரித்து மாபெரும் பொதுக்கூட்டமொன்று இடம்பெறவுள்ளது.

குறித்த கூட்டமானது இன்று (18-08-2024) பிற்பகல் மூன்று மணிக்கு வற்றாப்பளை செந்தமிழ் விளையாட்டு மைதானத்தில் முன்னெடுக்கப்படவுள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் தமிழர் அரசியலில் ஒரு திருப்பு முனையாக தமிழ்த் தேசிய கட்சிகளும் மற்றும் பொது அமைப்புக்களும் சேர்ந்து பா.அரியநேந்திரனை  தமிழர் தரப்பின் பொது வேட்பாளராக நிறுத்தியுள்ளது.




இந்தநிலையில், சங்கு சின்னத்தில் போட்டியிடும் பா.அரியநேந்திரனை ஆதரித்தே குறித்த கூட்டமானது முன்னெடுக்கப்படவுள்ளது.


இந்த கூட்டத்தில் தமிழ்தேசிய கட்சிகளின் தலைவர்களும் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளும் உரையாற்றவுள்ளனர்.


இதனடிப்படையில், கூட்டத்தில் கட்சிகளாக அல்லாமல் தமிழ் இனமாக வந்து மக்களை கலந்துகொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



மேலும்,இன்று காலை ஒன்பது மணிக்கு தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன் தந்தை செல்வா நினைவுத் தூபிக்கு வணக்கம் செலுத்துவதுடன் அதன் பின் ஊடகச் சந்திப்பும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை