மட்டக்களப்பு - வவுணதீவு பொலிஸ் பிரிவில் சட்ட விரோதமான முறையில் அனுமதி பத்திரம் இல்லாது மண் ஏற்றுச் சென்ற உழவு இயற்திரத்துடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது இன்று(05-08-2024) இடம்பெற்றுள்ளது.
வவுணதீவு பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரிசோதகர் ஈ.எம். கெமுனு வசத்த தலைமையிலான பொலிஸார் கொத்தியாபுலை பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
மேலும், கைது செய்யப்பட்ட நபரையும் மண் நிரப்பப்பட்ட உழவு இயந்திரத்தையும் நீதி மன்றின் ஊடக சட்ட நடவடிக்கை எடுக்கும் பணியை மேற்கொண்டு வருவதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.