மதுபான விலை குறைப்பு குறித்து வெளியான அறிவிப்பு!



மதுபான விலைகள் குறைக்கப்பட உள்ளதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டில் மதுபான வகைகளின் விலை குறைக்கப்படுவதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை என மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.

ஆயிரம் ரூபாவினால் குறைக்கப்பட உள்ளதாக தகவல்
மதுபான விலை குறைக்கப்படுவதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் பரிமாறப்பட்டு வரும் நிலையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

குறிப்பாக கல் எனப்படும் அதிவிசேட சாரய வகையின் விலை சுமார் ஆயிரம் ரூபாவினால் குறைக்கப்பட உள்ளதாக தகவல்கள் பகிரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த மதுபான விலை குறைப்பு தொடர்பில் சில அமைச்சர்களும் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை