2024 ஒலிம்பிக் போட்டிகள் கடந்த ஜூலை மாதம் 26 ஆம் திகதி தொடங்கி 15 நாட்களுக்கு மேல் நடைபெற்ற நிலையில் இன்றுடன் (11-08-2024) நிறைவடைகிறது.
இந்தநிலையில், 32 விளையாட்டுகளுக்கு அமைவாக 329 போட்டிகள் நடைபெற்றதுடன் போட்டிகளில் 10,714 வீரர்கள் பங்கேற்றனர்.
நேற்று (11-08-2024) ஆண்கள் மற்றும் பெண்களுக்கான 100 மீற்றர் தொடர் ஓட்டப் போட்டிகளின் இறுதிப் போட்டிகள் இடம்பெற்றன.
பெண்களுக்கான போட்டி
இதில் ஆடவர் பிரிவில் முதலிடத்தை கனேடிய அணியும், பெண்களுக்கான போட்டியில் அமெரிக்காவும் முதலிடத்தை பெற்றுக்கொண்டன.
தங்கப் பதக்கப் பட்டியலில் சீனா முதலிடம் பிடித்து 39 தங்கப் பதக்கங்களை வென்ற நிலையில் தங்கப் பதக்கப் பட்டியலில் அமெரிக்கா 38 தங்கப் பதக்கங்களுடன் இரண்டாவது இடத்திலும் அவுஸ்திரேலியா 18 தங்கப் பதக்கங்களுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.