மின்சாரம் மற்றும் எரிபொருள் விநியோகம் தொடர்பில் வெளியான அதிவிசேட வர்த்தமானி



மின்சாரம் மற்றும் எரிபொருள் விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகளையும் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த வர்த்தமானி அறிவித்தல் நேற்று (05-08-2024) வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


ஜனாதிபதியின் செயலாளரின் கையொப்பத்துடன் இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.


ஜனாதிபதியின் உத்தரவின் பிரகாரம் அவரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை