இலங்கையில் நடைபெறவுள்ள 2024 ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டார்.
05 பிரதான அம்சங்களை கொண்டு ரணில் விக்கிரமசிங்கவின் தேர்தல் விஞ்ஞாபனம் உருவாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான நிகழ்வு கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் நடைபெற்று வருகின்றது.
அதேவேளை இலங்கையின் 9 ஆவது ஜனாதிபதி தேர்தல் வரும் செப்டெம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு “ரணிலுடன் இணைந்து நாட்டை வெல்லும் 5 ஆண்டுகள்” என்ற தொனிப்பொருளில் பெயரிடப்பட்டுள்ளது.
அதோடு இதன்போது இயலும் ஸ்ரீலங்கா இணையத்தளம் உத்தியோகபூர்வமாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.