விபத்தில் சிக்கி காயமடைந்த நபரொருவரை 1990 அம்பியூலன்ஸ் சேவை மூலம் வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற இராணுவ சிப்பாய் ஒருவர், அம்பியூலன்ஸில் இருந்த பெண் ஊழியர் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காயமடைந்தவரை 1990 அம்பியூலன்ஸ் சேவை மூலம் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்கையில் சந்தேக நபரான இராணுவ சிப்பாயும் அம்பியூலன்ஸில் ஏறியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பனாகொடை இராணுவ முகாமில் கடமையாற்றும் இராணுவ சிப்பாய் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹொரணை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.