ஊடகவியலாளர்களுக்கான விசேட திட்டம் - ஜனாதிபதியின் முக்கிய அறிவிப்பு!



எதிர்வரும் புதிய நாடாளுமன்றத்தின் கீழ் உள்ளூர் ஊடகவியலாளர்களின் பிரச்சினைகள் மற்றும் முறைப்பாடுகளை முன்வைப்பதற்கு ஊடக ஆணைக்குழுவொன்றை ஸ்தாபிப்பதற்கும் அவர்களின் சேவை ஒப்பந்தங்கள் தொடர்பில் ஆராயும் அதிகாரம் வழங்குவதற்கும் கவனம் செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை பத்தரமுல்ல வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் நாடு தழுவிய ஊடகவியலாளர்கள் அமைப்பின் உள்ளூர் ஊடகவியலாளர்களை பாராட்டி கருத்து தெரிவிக்கும் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

உள்ளூர் ஊடகவியலாளர்களின் பிரச்சினைகள் மற்றும் ஆலோசனைகள் அடங்கிய பிரேரணை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது.

இந்தநிலையில், நாட்டின் பொருளாதாரத்தை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு பொறுப்பான கட்சிகளை உள்ளடக்கிய புதிய அரசியல் அமைப்பு நாட்டில் ஸ்தாபிக்கப்பட வேண்டும் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, தேர்தலை ஒத்திவைக்க தாம் ஒரு போதும் விரும்பவில்லை எனவும் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் பொறுப்பு தமக்கே வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை