ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் குகதாசன் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
பல விடயங்கள் கலந்தாய்வு
இந்த சந்திப்பு நேற்றைய தினம் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது தமிழர் சார் பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், திருகோணமலை மாவட்டத்தில் நிலவும் பல்வேறு தேவைகள் மற்றும் அபிவிருத்தி பற்றியும் ஜனாதிபதியுடன் இதன்போது குகதாசன் கலந்துரையாடியுள்ளார்.