சென்னைக்கும் யாழ். பலாலிக்குமிடையேயான இண்டிகோ (Indigo) ஏயார்லைன்ஸ் நிறுவனத்தின் புதிய விமான சேவை நாளை(01-09-2024)ஆம் திகதி ஆரம்பம்
நாளை முதலாம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது நாளை முதல் தினந்தோறும் சென்னையிலிருந்து யாழ். பலாலிக்கு விமான சேவை நடத்தப்படவுள்ளதாக இண்டிகோ (Indigo) ஏயார்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தற்போது யாழ். பலாலிக்கு தினசரி விமான சேவையை இந்தியாவின் அலையன்ஸ் ஏயார் விமானம் (Alliance Air) நடத்துகிறது. இதேவேளை யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை சர்வதேச தரத்துக்கு விரிவுபடுத்துவதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது இவ்வாறிருக்க நாகபட்டினத்துக்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான பயணிகள் படகு சேவை அண்மையில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.