இலங்கையில் இளம் குடும்பப் பெண்ணுக்கு பச்சை குத்திய விவகாரம் - சுவிஸ் மாப்பிள்ளை எடுத்த முடிவு!



திருமணம் முடித்து சுவிட்சர்லாந்திற்கு செல்ல முற்பட்ட இளம் குடும்ப பெண்ணொருவரை அவரது கணவன் விவாகரத்து செய்வதற்கு ஆயத்தமாகியுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன் 26 வயதான வவுனியாவைச் சேர்ந்த இளம் பெண்ணொருவர் சுவிட்சர்லாந்தை வசிப்பிடமாகவும் முல்லைத்தீவை சொந்த இடமாகவும் கொண்ட இளைஞன் ஒருவரை திருமணம் முடித்துள்ளார்.


திருமணம் முடிப்பதற்கு முன் குறித்த இளம் பெண் பியூட்டி பார்லர் ஒன்றில் வேலை செய்து வந்ததாகத் தெரியவருகின்றது.

திருமணம் நடந்து முடிந்து சுவிஸ் திரும்பிய கணவன் அங்கிருந்து மனைவியுடம் மிகவும் அநாகரிகமான முறையில் சண்டையிடத் தொடங்கியுள்ளார்.


குறித்த இளம் பெண்ணின் உடலில் ஒரு பகுதியில் V என்ற ஆங்கில எழுத்து பச்சை குத்தப்பட்டிருந்ததாகத் தெரியவருகின்றது.


இதனை திருமணத்தின் பின் சில நாட்களின் பின்னரே அவதானித்து பச்சை குத்தியது தொடர்பாக சந்தேகத்துடன் கணவன் தொடர்ந்து கேட்டு வந்துள்ளார்.

இதன் பின்னர் சுவிஸ் செல்லும்வரை மௌனமாக இருந்த மாப்பிள்ளை அங்கு சென்ற பின் தனது மனைவியை தொடர்ச்சியாக தகாத முறையில் ஏசி மற்றும் தொடர்ச்சியாக கேட்டு சண்டையிட்டு வருவதாக தெரியவருகின்றது.


இதன் பின்னர் கணவன் சுவிஸ்லாந்திலிருந்து குறித்த இளம் பெண்ணுக்கு விவாகரத்துக்கு விண்ணப்பித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
புதியது பழையவை