ஜப்பானில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.6 ஆக பதிவாகியுள்ளது.
குறித்த தகவலை அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சக்திவாய்ந்த நிலநடுக்கம்
ஜப்பானின் மியாசாகியில் ஏற்கெனவே 6.9, 7.1 ரிக்டர் அளவில் இருமுறை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது.
ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டு திரும்ப பெறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.