கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த சரக்குக் கப்பல் தீ விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த சம்பவம் இன்று (11-08-2024) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக இலங்கை துறைமுக அதிகார சபையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, குறித்த கப்பலில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதுடன் வெடிப்பும் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது, துறைமுக தீயணைப்புப் பிரிவு உட்பட துறைமுக ஊழியர்கள் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதுடன், தீ கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டிருந்தால் பாரிய அழிவு ஏற்படுத்தியிருக்கும் என அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தீயினால் கப்பலுக்கு ஏற்பட்ட சேதம் இதுவரை மதிப்பிடப்படவில்லை என்பதுடன் சரக்கு மற்றும் கப்பலுக்கு அதிக சேதம் ஏற்பட்டுள்ளதாக சிரேஷ்ட அதிகாரி தெரிவித்துள்ளார்.