மீண்டும் வாிசை யுகத்திற்குத் தயாராகுமாறு ஜனாதிபதி எச்சாிக்கை!



சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கைகளில் இருந்து நாம் விலகிக் கொண்டாலோ அல்லது திருத்தம் செய்ய முயற்சித்தாலோ அதன் பலன்களை இழக்க நேரிடும் என ஜனாதிபதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எச்சாிக்கை விடுத்துள்ளாா்.

அத்துடன், நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைகள் முழுமையாகத் தீர்க்கப்படாவிட்டாலும், மக்களுக்கு பெருமளவு நிவாரணங்களை வழங்க முடிந்துள்ளதாக கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளாா்.

அதன்படி, 2022ஆம் ஆண்டை விட மக்கள் சுமூகமாக வாழும் நிலைமை உருவாகியுள்ளது.சர்வதேச நாணய நிதியத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் காரணமாகவே எம்மால் அவ்வாறானதொரு நிலையை உருவாக்க முடிந்தது என்றும், எமக்கு கடன் வழங்கிய நாடுகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி உடன்பாடுகளை எட்டியுள்ளோம் எனவும் அவா் சுட்டிக்காட்டியுள்ளாா்.

அதன்படி 2042 ஆம் ஆண்டு வரை நாங்கள் வாங்கிய கடனை மீளச் செலுத்த வேண்டும். இந்த உடன்படிக்கைகளில் இருந்து நாம் விலகிக் கொண்டாலோ அல்லது திருத்தம் செய்ய முயற்சித்தாலோ அதன் பலன்களை இழக்க நேரிடும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எச்சாிக்கை விடுத்தாா்.

இந்நிலையில், சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்தின் வெற்றி குறித்து நாம் திருப்தியடைய முடியாது என்பதுடன், இந்தியாவைப் போல நாமும் பொருளாதார வளர்ச்சியை நோக்கிச் செல்ல வேண்டும் என்றும் ஜனாதிபதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும்,  குறிப்பிட்டுள்ளாா்.
புதியது பழையவை