அரியநேத்திரனுக்கு இரண்டு வார அவகாசம் - சுமந்திரன் எம்.பி



பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள அரியநேத்திரனுக்கு விளக்கம் கோரி இரண்டு வார கால அவகாசம் கொடுத்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளதுடன், அதுவரை கட்சிக் கூட்டங்களிலும் பங்கேற்ற தடை என தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் நேற்றையதினம் (18-08-2024) இடம்பெற்ற கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.



தமிழ் பொது வேட்பாளராக வர்ணிக்கப்பட்டுள்ள அரியநேந்திரன் சம்மந்தமாக கலந்துரையாடப்பட்டது. சென்ற கூட்ட தீர்மானத்தின் படி விளக்கம் கோரி இரண்டு வார கால அவகாசம் கொடுத்து அவருக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதற்குரிய பதில் கிடைத்த பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுப்போம்.



அதுவரைக்கும் எமது கட்சியின எந்தக் கூட்டத்திலும் அவர் கலந்து கொள்ள மாட்டார். அந்தப் பின்னணியில் எதிர்வரும் நாட்களில் இடம்பெறும் பிரசாரக் கூட்டங்கள் தொடர்பில் கேள்விகள் எழுந்துள்ளது.

கட்சி இது சம்மந்தமாக எமது ஆதரவாளர்களுக்கு கொடுக்கும் அறிவுரை என்னவென்றால் ஒருவருரிடம் விளக்கம் கோரி கடிதம் அனுப்பியுள்ளோம். இதனால் மேடைகளில் ஏறி ஆதரித்து பேசும் போது அவதானமாக இருக்குமாறு கட்சி உறுப்பினர்களை கேட்டுக் கொள்கின்றோம். எமது கட்சி இது வரை யாருக்கு ஆதரவு வழங்குவது என எந்த தீர்மானத்தையும் எடுக்கவில்லை என குறிப்பிட்டார்.
புதியது பழையவை