திருகோணமலையை சேர்ந்த இளைஞர் ஒலிம்பிக் போட்டியில் அரை இறுதிக்கு தகுதி பெற்றார்



திருகோணமலை சேருவிலையைச் சேர்ந்த அருணா என்ற விளையாட்டு வீரரான அருண தர்ஷன கடைசி நேரத்தில் 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார். 

அவர் பாரிஸ் ஒலிம்பிக்கில் 400 மீட்டர் ஓட்டப்பந்தய தூரத்தினை 44.99 வினாடிகளில் ஓடி முடித்திருந்த நிலையில், குறித்த பந்தயத்தை மூன்றாவது இடத்தில் முடித்த அருணா, தானாகவே அரையிறுதிக்கு தகுதி பெற்றார். 

இலங்கை வீரர் சுகத் திலகரத்னவுக்குப் பிறகு, இலங்கையர் ஒருவர் 400 மீற்றர் போட்டியை 45 வினாடிகளுக்குள் முடித்ததுள்ள வீரர் இவர் ஒருவராவார்.

ஒலிம்பிக் தரப்படுத்தலில்
46-வது இடத்திலிருந்த அருணா தற்போது இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் 18-வது இடத்திற்கு முன்னேறி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை