இலங்கையில் தங்கத்தின் விலையானது கடந்த சில மாதங்களாக சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.
கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்த தங்க விலையானது மீணடும் படிப்படியாக அதிகரித்துச்செல்கின்றது.
இன்றைய (28-08-2024) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் (Gold Ounce) விலையானது 758,148 ரூபாவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
இன்றைய நிலவரம்
24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 26,750 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 24 கரட் தங்கப் பவுண் 213,950 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேபோல 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 24,530 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 22 கரட் தங்கப் பவுண் ( 22 karat gold 8 grams) 196,200 ரூபாவாக பதிவாகியுள்ளது.
21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 grams) 23,410 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண்(21 karat gold 8 grams) 187,250 ரூபாவாக பதிவாகியுள்ளது.
செட்டியார் தெரு விபரங்கள்
அத்துடன், கொழும்பு செட்டியார் தெரு தங்க நிலவரங்களின் படி 24 கரட் தங்கப் பவுண் (24 karat gold 8 grams) ஒன்று 201,500 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேவேளை, அங்கு (22 karat gold 8 grams) ஒன்று 186,400 ரூபாவாக பதிவாகியுள்ளது. எனினும் தங்க ஆபரணங்களின் விலை இந்த விலைகளிலிருந்து மாற்றமடையலாம் என்பது குறிப்பிடத்தக்கது.