இரத்தினபுரியில் நகைக்கடையொன்றில் போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் நகைக்கடையொன்றிற்கு தங்க நகையை கொள்வனவு செய்வதற்காக 102 ஐயாயிரம் ரூபாய் (5000) போலி நாணயத்தாள்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேகநபர் பதுளை சோனாதோட்டை பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபரிடம் காணப்பட்ட ஐயாயிரம் ரூபாய் நோட்டுகள் கட்டப்பட்டு இருந்ததால் சந்தேகத்தின் பேரில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து விரைந்த பொலிஸார் சந்தேகநபரை கைது செய்து, மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.