பிறப்பு, இறப்பு மற்றும் திருமணங்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்



இந்த ஆண்டு முதல் விவாகரத்து வழக்குகள் தொடர்பான தகவல்களை வெளியிடுவதற்கு தேவையான ஆதாரங்களை வழங்குமாறு நீதிபதிகளுக்கு நீதிச்சேவை ஆணைக்குழு அறிவித்துள்ளது.

நீதி அமைச்சினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன அனைத்து மாவட்ட நீதிபதிகள் மற்றும் மேலதிக மாவட்ட நீதிபதிகளுக்கு அறிவித்துள்ளார்.

பதிவாளர் நாயகம் திணைக்களம், வருடாந்தம்  இலங்கையில் பதிவு செய்யப்பட்ட பிறப்பு, இறப்பு மற்றும் திருமணங்கள் தொடர்பான தகவல்களை மாவட்ட மட்டத்தில் வெளியிட்டு வருகின்றது.


விவாகரத்து தொடர்பான தகவல் கோரிக்கைகள்

இதற்கமைய, விவாகரத்து தொடர்பான தகவல் கோரிக்கைகள் நிவர்த்தி செய்யப்படுவதால், விவாகரத்து தொடர்பான ஆதாரங்களை இந்த ஆண்டு முதல் வெளியிட பதிவாளர் நாயகம் திணைக்களம் தீர்மானித்துள்ளதாகவும் பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, இந்த ஆண்டு முதல் விவாகரத்து வழக்குகள் தொடர்பான தகவல்களை வெளியிடுவதற்கு தேவையான தகவல்களை வழங்குமாறு நீதிபதிகளுக்கு நீதிச்சேவை ஆணைக்குழு அறிவித்துள்ளது.
புதியது பழையவை