வவுனியாவில் விபத்து – ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழப்பு!



வவுனியா குருக்கள் புதுக்குளம் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் ஸ்தலத்திலேயே பலியாகியதோடு மேலும் ஒருவர் யாழ்ப்பாணம் வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மன்னாரிலிருந்து வவுனியா நோக்கி மீன் ஏற்றி வந்த வாகனத்தோடு வவுனியாவிலிருந்து குருக்கல் புதுக்குளம் நோக்கி வேலையின் நிமித்தம் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த இருவரே விபத்தில் சிக்கி உள்ளனர்.

இதன் காரணமாக மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவர் ஸ்தலத்தில் பலியானதோடு மற்றயவர் வவுனியா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மரணித்தவர் யாழ்ப்பாணம் பருத்தித்துறையை சேர்ந்த 30 வயதுடைய பரமநாத் சிவாகரன் எனவும் காயமடைந்தவர் செல்லத்துரை கிருஷ்ணபாலன் எனவும் பொரிஸார் தெரிவித்துள்ளனர். பூவரசங்குளம் பொலீசார் குறித்த விபத்து தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
புதியது பழையவை