புதையல் தோண்டிய மூவர் மஹியங்கனை பொலிஸாரினால் கைது!




சியம்பலாண்டுவ மற்றும் மஹியங்கனை பகுதியை சேர்ந்த மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

மஹியங்கனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மஹியங்கனை கெசல்பொத்த பகுதியில் புதையல் தோண்டுவதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய சம்பவ இடத்திற்கு விரைந்த மஹியங்கனை பொலிஸ் குழுவொன்று புதையல் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த மூவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்தப்படும் சில உபகரணங்களும் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் இன்றைய தினம் மஹியங்கனை நீதிவான் முன்னிலையில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.
புதியது பழையவை