தமிழ் பொது வேட்பாளர் தொடர்பான நகர்வுகளில் இணைந்து செயல்பட்டு இருந்த ரெலோ, புளொட், ஜனநாயக போராளிகள் ஆகிய கட்சிகள் தமிழ் பொது வேட்பாளர் என்ற எண்ணக்கருவை கைவிட்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு தமது உத்தியோகபூர்வமான ஆதரவை வழங்குவதற்கு தயாராக இருப்பதாக தெரிய வந்திருக்கிறது.
எதிர்வரும் தினங்களில் இது தொடர்பில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் நடைபெற இருப்பதாகவும் அதில் ரெலோ, புளொட், ஜனநாயக போராளிகள் ஆகிய கட்சிகள் ஆதரவு வழங்க உள்ளதாகவும், அந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவவிற்கு ஆதரவு வழங்குமாறு சீ.வி விக்னேஸ்வரனிடமும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தக் கோரிக்கைகளின் போதே ரெலோ, புளொட், ஜனநாயக போராளிகள் ஆகிய கட்சிகள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்க உள்ளதாக தகவல்கள் வெளி வந்திருக்கிறது.
சி.வி விக்னேஸ்வரனுடைய கொழும்பு இல்லத்திற்கு சென்ற ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்த்தன, ரெலோ, புளொட், ஜனநாயக போராளிகள் ஆகிய கட்சிகள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு வழங்குவதாகவும் சி.வி விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணியினரும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு வழங்குமாறும் கூறியிருந்தார்.
இந்த அடிப்படையில் தான் ரெலோ, புளொட், ஜனநாயக போராளிகள் ஆகிய கட்சிகள் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு வழங்கியுள்ளமை தெரியவந்துள்ளது.
தமிழ் பொது வேட்பாளர் என்கின்ற எண்ணக்கருவை உருவாக்கிய தமிழ்க் கட்சிகள் அதை கைவிட்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு வழங்கவுள்ளன என்ற செய்தி வெளிவந்திருக்கின்றது.