அலி சாஹிர் மௌலானா ஜனாதிபதிக்கு ஆதரவு!



ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான    அலிசாஹிர் மௌலானா எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்க  இணைந்து கொண்டார்.

அலிசாஹிர் மௌலானா உள்ளிட்ட குழுவினர் இன்று (16-08-2024) பிற்பகல் கொழும்பு பிளவர் வீதியில் உள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் அலுவலகத்திற்கு வருகை தந்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து உத்தியோகபூர்வமாக இதனை அறிவித்தனர்.


அமைச்சர் கஞ்சன விஜேசேகர, பாராளுமன்ற உறுப்பினர்களான வஜிர அபேவர்தன, எஸ்.எம்.எம். முஷர்ரப், ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியும் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான சாகல ரத்நாயக்க, முன்னாள் அமைச்சர் மனுஷ நாணாயக்கார ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.


புதியது பழையவை