வைத்தியசாலையில் பெண் ஊழியர்களை ரூம்போட கூப்பிடும் அதிகாரிகள்




மன்னார் வைத்தியசாலையில் பணிபுரியும் பெண்கள் மீது சில ஆண் மேலாளர்கள் பாலியல் தொந்தரவு கொடுப்பதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.

வைத்தியசாலைக்குள் மேல் அதிகாரிகளின் மோசமான செயற்பாடுகள் தொடர்பில் சமூக வலைத்தளங்கள் ஊடாக, பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் தெரிவித்துள்ளார்.  



இவ்வாறு பெண் ஊழியர்களை உயர் அதிகாரிகள் பாலியலுக்கு அழைக்கும் செயலபாடுகள் மன்னாரில் மட்டும் அல்லாது வடக்கு கிழக்கில் சில்லறை கடைகள் முதல் அரச அலுவலகங்கள் வரை புரையோடிப்போயுள்ள புற்றுநோயாக மாறியுள்ளது.


அதேவேளை மன்னார் வைத்தியசாலையில் ஊழியர்களனின் அசமந்ததால் அண்மையில் இளம் தாய் சிந்துஜா உயிரிழந்த சம்பவத்திற்கு இன்ன்னும் நீதி கிடைக்கவில்லை.



இளம் தாய் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் நீதியான விசாரணைகள் முன்னடுக்கபடவில்லை என சமூக அமைப்புக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இந்த நிலையில், மன்னார் வைத்தியசாலையில் பெண் ஊழியர்களை ரூம்போட கூப்பிடும் அதிகாரிகள் தொடர்பில் பெண்  ஊழியர் ஒருவர் வெளிப்படுத்திய தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இந்த நிலையில்  இனியேனும் மன்னார் வைத்தியசாலை சம்பவங்கள் தொடர்பில் நீதியான விசாரணைகள் இடம்பெறுமா என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
புதியது பழையவை