முட்டை விலை 10 ரூபாவால் குறைந்தது!



சந்தையில் முட்டை ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைந்துள்ளதாக அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.

உற்பத்தி அதிகரிப்பு மற்றும் தேவை குறைவடைந்தமையே இதற்கான காரணம் என சங்கத்தின் செயலாளர் அனுரசிறி மாரசிங்க தெரிவித்துள்ளார்.

இதன்படி, தற்போது ஒரு முட்டையின் விலை 28 ரூபா தொடக்கம் 30 ரூபா வரையில் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதியது பழையவை