தேசிய சிறைக் கைதிகள் தினத்தை முன்னிட்டு, மட்டக்களப்பு சிறைச்சாலையில், சிறு குற்றங்களுக்காக தண்டனை அனுபவித்து வந்த 11 கைதிகளுக்கு, ஜனாதிபதியால் பொதுமன்னிப்பளிக்கப்பட்டது.
மட்டக்களப்பு சிறைச்சாலையின் அத்தியட்சகர் என்.பிரபாகரன் தலைமையில் கைதிகள் இன்று(12-09-2024) காலை 10.30 மணியளவில் விடுதலை செய்யப்பட்டனர்.
சிறைச்சாலையின் பிரதம ஜெயிலர் ஏ.பி.வானுக தயான் உள்ளிட்ட சிறைச்சாலை அதிகாரிகளும் இதன்போது
கலந்துகொண்டனர்.