12 வயது சிறுமி ஒருவரை பலமுறை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் அயல் வீட்டு நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக மத்துகம பொலிஸார் தெரிவித்தனர்.
07 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் 12 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமி தனது பெற்றோர், பாட்டன், பாட்டி மற்றும் இரு இளம் சகோதரிகளுடன் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளார்.
பலமுறை பாலியல் துஷ்பிரயோகம்
சந்தேக நபரான அயல் வீட்டு நபர் இந்த சிறுமியை முதன்முதலில் கழிவறை ஒன்றில் வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ள நிலையில், பின்னர் தொடர்ந்து பலமுறை பாலியல் துஷ்பிரயோகம் செய்து வந்துள்ளார்.
சந்தேக நபரால் இந்த சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படுவதைப் பார்த்த மற்றுமொரு சிறுமி ஒருவர் இது தொடர்பில் தனது பாடசாலை ஆசிரியையிடம் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, ஆசிரியை இது தொடர்பில் மத்துகம பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ள நிலையில் விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை போதைப்பொருளுக்கு அடிமையானர் என தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.