1990ம் ஆண்டு செப்டம்பர் 5ம் திகதி, கிழக்குப் பல்கலைக கழகத்தில், அகதிகளாகத் தஞ்சமடைந்திருந்த 158 பேர், இராணுவத்தால் அழைத்துச் செல்லப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்ட நிலையில், அவர்களது 34வது நினைவு தினம் இன்று(05-09-2024) அனுஸ்டிக்கப்பட்டது.
காணாமல் ஆக்கப்பட்டாலும் உயிருடன் இருப்பார்கள் என்ற நம்பிக்கை இழந்த நிலையில், மட்டக்களப்பு மாவட்டதில் படுகொலை செய்யப்பட்டவர்களின் பட்டியலில் இவர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளனர். இன்று, வந்தாறுமூலை பல்கலைக்கழக வளாக முன்றலில், கிழக்குப் பல்கலைக்கழக கலை காலாசார பீட மாணவர் ஒன்றியம் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் என்பன இணைந்து நினைவேந்தல் நிகழ்வினை ஏற்பாடு செய்தனர்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி அ.அமலநாயகி,கிழக்குப் பல்கலைக்கழக கலை காலாசார பீட மாணவர் ஒன்றிய தலைவர் வி.கஜரூபன்,சிவில் சமூக செயற்பாட்டாளர் திருமதி ரஜனி ஜெயபிரகாஸ், அகம் மனிதாபிமான வள நிலையத்தின் திட்டமுகாமையாளர் செல்வி நா.மிருஜா உட்பட பெருமளவானோர் நினைவேந்தலில் கலந்துகொண்டனர்.
பல்கலைக்கழக வளாகத்தின் முன் பாதாதைகளை ஏந்தியவாறு தமது உறவுகளுக்கு நீதி கோரி கவன ஈர்ப்புபேராட்டத்த்திலும்
இவர்கள் ஈடுபட்டனர்.