நேற்று (03-09-2024) காலை பாணந்துறை கடற்கரையில் சுமார் 2,000 கிலோ எடையுள்ள 15 அடி நீளமான திமிங்கலம் கரை ஒதுங்கியுள்ளதாக பாணந்துறை காவல்துறை உயிர் பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
விலங்கின் உடலில் பல கீறல்கள் இருந்ததாகவும், தரையில் வந்த சிறிது நேரத்தில் இறந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த விலங்கு ஆண் விலங்கு என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இது தொடர்பில் வனவிலங்கு அலுவலகம் மற்றும் நாரா நிறுவனத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.