2024 ஜனாதிபதி தேர்தல் தபால் மூல வாக்களிப்பு முடிவுகள் வெளியாகிவரும் நிலையில், தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசநாயக்க தொடர்ந்தும் முன்னிலை உள்ளார்
அதன்படி 12 மாவட்டங்களின் தபால் மூல வாக்குகளின் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் 154,657 வாக்குகள் அனுரகுமார திசநாயக்க பெற்றுள்ளார்.
இதுவரை 11 மாவட்டங்களில் அனுரகுமார திசநாயக்கவுக்கு அதிக வாக்குகள் கிடைத்துள்ளன.
இதேவேளை சுயேட்சை வேட்பாளரான ரணில் விக்கிரமசிங்க 52,482 வாக்குகளையும், ஐக்கிய மக்கள் சக்தியின் சஜித் பிரேமதாச 48,970 வாக்குகளையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.