குருநாகல், ரஸ்நாயக்கபுர பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 30 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இனந்தெரியாத நபர்களால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மூவர் உயிரிழப்பு
அதேவேளை இன்று (19-09-2024) காலை மிதிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொவியாபான பிரதேசத்தில் உள்ள மீன் கடையொன்றில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரினால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் பேரில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
38 வயதான கெலும் சதுரங்க என்ற மீன் வியாபாரி ஒருவரே சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
அதேவேளை கடந்த 24 மணி நேரத்தில் இடம்பெற்ற நான்காவது துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இதுவாகும். மற்றைய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் கொஹுவல, தங்காலை மற்றும் மிதிகம பிரதேசங்களில் இருந்து பதிவாகியுள்ளன.
இந்த சம்பவங்களில் 3 பேர் உயிரிழள்ள நிலையில், இருவர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.