36 வருட கல்விச்சேவையில் இருந்து ஓய்வு பெறுகிறார் சிரேஸ்ட ஊடகவியாலாளர் வி. ரி. சகாதேவராஜா
36 வருடங்கள் சிறப்பான முறையில் கல்விச்சேவை செய்து நாளை 28 ஆம் திகதி அறுபது வயது பூர்த்தியடைவதையிட்டு இன்று ஓய்வு பெறுகிறார் மூத்த ஊடகவியலாளர் விபுலமணி வி. ரி. சகாதேவராஜா.
சம்மாந்துறை கல்வி வலயத்தில் மிக நீண்ட காலம் 26 வருடங்கள் உதவிக்கல்விப்பணிப்பாளராக கடமையாற்றி இன்று ஓய்வு பெறும் வி. ரி. சகாதேவராஜா அவர்கள் அவரின் சொந்த ஊரான காரைதீவு நிருபர் என நாடறிந்த ஊடகவியலாராகவும் தனது சேவையை தொடர்கிறார்.
பேராதனை பல்கலைக்கழக கலைத்துறை பட்டதாரியான இவர் இலங்கை அதிபர் சேவையில் முதலாம் தர அதிபராவார். விபுலாநந்த அடிகளாரின் தீவிர பக்தராவார்.