இலங்கையில் 4000 வாகனங்களைக் காணவில்லை - கணக்காய்வு அறிக்கை தகவல்



புதிய அரசாங்கம் நாட்டில் உள்ள அனைத்து அரசாங்க
நிறுவனங்கள் தொடர்பாகவும் கணக்காய்வு நடவடிக்கைகளை
நேற்று முதல் (27-09-2024) ஆரம்பித்துள்ளது.

இதற்கிணங்க கல்வி சுகாதாரம்
தபால் திணைக்களம் ஜனாதிபதி காரியாலயம் நீர்ப்பாசன திணைக்களம் உட்பட மேலும் சில நிறுவனங்கள்
தொடர்பில் சோதனை மற்றும் கணக்காய்வு நடவடிக்கைகள் முதற் கட்டமாக தேசிய கணக்காய்வு பணியகத்தால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

வாகனங்கள் தொடர்பில் நடத்தப்பட்ட கணக்காய்வில் இதுவரை 4000 வாகனங்களை காணவில்லை
அல்லது இதுவரை ஒப்படைக்கப் படவில்லை எனவும் கூறப்படுகிறது

இதே வேளை ஜனாதிபதி காரியாலயம் முன்பாக முறையாக ஒப்படைக்காது கைவிடப்பட்டு சென்றுள்ள 107 வாகனங்கள் தொடர்பில் அந்த வாகனங்கள் தொடர்பில்
அரசாங்கம் பிரச்சாரம் தேடுவதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் அடிப்படை இல்லாதவை எனவும் எந்தளவு விமர்சனங்கள் வந்தாலும் உரிய கோவைகள் மற்றும் வாகனங்கள் பரீட்சிக்கப்படும் எனவும் அரசாங்க சொத்துக்களான அவற்றை
முறையாக ஒப்படைக்காத குற்றச் சாட்டில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப் படும் என தேசிய மக்கள்
சக்தி மத்திய செயற்குழு உறுப்பினர்
வசந்த சமரசிங்க தெரிவித்தார்.
புதியது பழையவை