இந்தியாவில் ஒரேநாளில் 9 பதக்கங்களை வென்ற இலங்கை



இந்தியாவில் நடைபெறும் “4வது தெற்காசிய கனிஸ்ட நிலை தடகள செம்பியன்சிப் போட்டிகள் 2024”இன் ஆரம்ப நாளான நேற்று இலங்கை தடகள வீரர்கள் மூன்று தங்கம், மூன்று வெள்ளி மற்றும் மூன்று வெண்கலம் உட்பட மொத்தம் ஒன்பது பதக்கங்களை வென்றுள்ளனர்.

இதன்படி, ஆடவருக்கான 100 மீற்றர் இறுதிப் போட்டியில் இலங்கையின் மெரோன் விஜேசிங்க 10.41 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து தங்கப்பதக்கத்தையும், அதே போட்டியில் தினேத் வீரரத்ன 10.49 வினாடிகளில் வெள்ளிப்பதக்கத்தையும் வென்றனர்.

இலங்கை அணியின் களப்பயிற்றுவிப்பாளர் நிலையில் இருந்து ரூக்ஸ் விலகல்
இலங்கை அணியின் களப்பயிற்றுவிப்பாளர் நிலையில் இருந்து ரூக்ஸ் விலகல்
இலங்கை வீராங்கனை
இதேவேளை, பெண்களுக்கான 800 மீற்றர் இறுதிப் போட்டியில் சன்சலா ஹிமாசினி வெண்கலப் பதக்கத்தையும், தருசி அபேசிகா தங்கப் பதக்கத்தையும் வென்றுள்ளார்.


ஆண்களுக்கான 800 மீற்றர் இறுதிப் போட்டியில் இலங்கை வீராங்கனை சவிந்து அவிசிகா தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.

பெண்களுக்கான 100 மீற்றர் இறுதிப் போட்டியில் சினெல்லா ஆனி விஜேதுங்க 12.04 வினாடிகளில் கடந்து வெண்கலம் வென்றார்.

ஆண்களுக்கான குண்டு எறிதல்
ஆண்களுக்கான குண்டு எறிதலில் ஏ.டபிள்யூ. ஜெயவி ரன்ஹித 15.62 மீட்டர் தூரம் எறிந்து வெண்கலப் பதக்கம் வென்றார்.


மூன்று நாள் தெற்காசிய ஜூனியர் தடகள செம்பியன்சிப் போட்டி சென்னை ஜவஹர்லால் நேரு மைதானத்தில் நேற்று ஆரம்பமானது

இந்த விளையாட்டுப் போட்டிகளில்  இலங்கை அணியில் 53 கனிஸ்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
புதியது பழையவை