இலங்கையின் 9ஆவது நிறைவேற்று ஜனாதிபதியாக பதவியேற்றார் அநுர குமார திசாநாயக்க




இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அநுரகுமார திசாநாயக்க சற்று முன் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

இன்று காலை (23-09-2024) ஜனாதிபதி செயலகத்தில் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில், அநுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்துள்ளார்.

அநுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டதையடுத்து அவர் தனது விசேட உரையை நிகழ்த்தியுள்ளார்.

அதிகூடிய வாக்குகள்
தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அண்மையில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் அதிகூடிய வாக்குகளைப் பெற்று ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.


அத்துடன் இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அனுரகுமார திஸாநாயக்க, தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்பதற்கான அரசிதழும் வர்த்தமானியும் வெளியிடப்பட்டுள்ளது.
புதியது பழையவை