சிங்களவர்களால் தோற்கடிக்கப்பட்ட அரசியல்வாதிகள் - தமிழர்களின் சாபம் தொடரும்.....



இலங்கையில் நடந்த முடிந்த ஜனாதிபதி தேர்தல் மூலம் தென்னிலங்கை மக்கள், அரசியல்வாதிகளுக்கு சரியான பாடம் ஒன்றை வழங்கியுள்ளனர்.

இதுவரை காலமும் தமிழர்களையும், தமிழிழன அழிப்பின் வெற்றிகளையும் தமது அரசியல் வெற்றியாக கொண்டவர்களுக்கு இந்தத் தேர்தல் பெரும் ஏமாற்றமாக மாறியுள்ளது.

பொதுவாக தேர்தல் பிரசார மேடைகளில் தமிழர்களுக்கு எதிரான அழிப்பும், விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தலுமே முக்கிய கோஷமாக இருக்கும்.


சிங்கள அரசியல்வாதிகள்
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் நிறைவடைந்து 15 வருடங்கள் கடந்துள்ள நிலையில், சிங்கள அரசியல்வாதிகளும் தங்கள அரசியல் பயணங்களை தொடர முடியாத அவலநிலைக்கு உள்ளாக்கப்பட்டு, சிங்களவர்கள் மத்தியில் தோல்வி கண்டுள்ளனர்.




அதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா மாறியுள்ளனர்.

பொன்சேகா தலைமையில் 2009ஆம் ஆண்டு போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. இதன் காரணமாக விடுதலைப் புலிகளை அழித்த வெற்றி வீரனாக தென்னிலங்கையில் கொண்டாடப்பட்டப்பட்டவர்.


ராஜபக்சர்களுக்கு அடுத்தபடியாக பொன்சேகா ஒட்டுமொத்த சிங்களவர்களாலும் கொண்டப்பட்ட ஒருவர். இன்று அவரின் பரிதாப நிலையை கண்டு அவரே கதிகலங்கும் அளவுக்கு நிலைமை தலைகீழாக மாறியுள்ளது.


போர் வெற்றியை கொண்டு ஆட்சிப்பீடம் ஏறலாம் என 2010ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் பொன்சேகா போட்டியிட்டார். அப்போது 4,173,185 வாக்குகளை பெற்றார்.

அவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட போதும், ராஜபக்சர்களின் சதியால் அவர் தோற்றடிக்கப்பட்டார்.


தமிழின அழிப்பு

இவ்வாறான நிலையில் நடந்து முடிந்த ஒன்பதாவது ஜனாதிபதி தேர்தலில் பொன்சேகா போட்டியிட்டார். அப்படியொருவர் போட்டியிட்டாரா என்பது குறித்து மக்களுக்கு தெரியாத அளவுக்கு அவரின் படுதோல்வி அமைந்துள்ளது. இந்தத் தேர்தலில் 22407 வாக்குகளை மட்டும் அவர் பெற்றுள்ளார்.


பொன்சேகா பங்கேற்ற அனைத்து மக்கள் சந்திப்பு கூட்டங்களிலும் வெறும் ஐந்து அல்லது 10 பேர் மட்டுமே கலந்து கொண்டிருந்தனர்.

நேற்று வரை வெற்றி நாயகனாக திகழ்ந்த பொன்சேகா, இன்று மக்களால் மதிக்கப்படாத ஒரு நபராக மாறியுள்ளார்.

இன அழிப்பு என்ற பேரில் தமிழினத்தை கொத்துக் கொத்தாக அழித்த சிங்கள பெருந்தலைவர்கள் இன்று, தென்னிலங்கை மக்களால் நிராகரிக்கப்பட்டு அதிகாரங்களிலிருந்து அகற்றப்பட்டுள்ளனர். அப்பாவி தமிழ் மக்களின் ஆத்மா சும்மா விடுமா... கர்மா தொடரும்....
புதியது பழையவை