இத்தாலி நாட்டைச் சேர்ந்த குந்தர் என்ற German Shepherd உலகின் பணக்கார நாயாக அறியப்படுகின்றது.
இதன் மொத்த சொத்து மதிப்பு இந்திய மதிப்பில் சுமார் 3,300 கோடி ரூபாயாக என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இதன் பெயரில் சொந்தமாகக் கப்பல் மற்றும் தனி விமானம் ஒன்றும் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
1992ஆம் ஆண்டு பெண்ணொருவர் தனக்கு வாரிசு இல்லாததால் மொத்த சொத்தையும் குந்தர் என்ற நாய் பெயரில் எழுதி வைத்துள்ளார்.
சொகுசு வாழ்க்கை வாழும் இந்த நாயின் சொத்துகளை நிர்வகிக்க அறங்காவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.