பேரூந்தில் கடத்தப்பட்ட தங்க புத்தர் சிலை



குருணாகல் (Kurunegala) கண்டி  வீதியில் பேரூந்தில் கடத்தி செல்லப்பட்ட தங்க புத்தர் சிலையுடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த கடத்தல் நடவடிக்கையானது கண்டி வீதியில் நேற்று (12-09-2024) நான்காவது மைல்கல் அருகில் பேருந்து ஒன்றில் மேற்கொள்ளப்பட்டதாக கட்டுகஸ்தோட்டை காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

கட்டுகஸ்தோட்டை  காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர்கள், புத்தளம் ,முந்தல், வனாத்தவில்லு மற்றும் உடப்பு ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களென தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட தங்க புத்தர் சிலையின் மதிப்பு இதுவரை கண்டறியப்படவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதனடிப்படையில், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நால்வரும் இன்று (13-09-2024) கண்டி நீதவான்
நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுகஸ்தோட்டை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை