செப்டம்பர் 26ம் திகதி, தமிழ் தேசிய பொதுக்கட்டமைப்பு எடுத்த ஏகமனதான தீர்மானத்திற்கமைய, குத்துவிளக்குச் சின்னத்திற்குப் பதிலாக, சங்கு சின்னத்தை மாற்றியமைப்பதற்கான பணிகள் முன்னெடுக்கப்படுவதாக ரெலோ கட்சியின் செயலாளர் நாயகமும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் இன்று ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து இலங்கைத் தமிழரசுக் கட்சியே வெளியேறியதாகவும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கருணாகரம் சுட்டிக்காட்டினார்.