மகளின் செயல்பாடுகளை கவனிப்பதற்காக தந்தை ஒருவர் மகளுக்கு சிசிடிவி கேமராவை பொருத்திய சம்பவம் சமூகவலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
பாகிஸ்தானை சேர்ந்த தந்தை ஒருவர் செய்த செயல்தான் தற்போது வைரலாகியுள்ளது.
மகளை கண்காணிக்க தலையில் சிசிடிவி பொருத்திய தந்தை; சமூகவலைத்தளங்களில் வைரல்! | Father With Head Mounted Cctv To Monitor Daughter
மகளின் தலையில் சிசிடிவி
பல்வேறு நாடுகளிலும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் எப்போதும் பெரும் கவலை அளிப்பதாகவே உள்ளன. இந்நிலையில் பாகிஸ்தானை சேர்ந்த தந்தை ஒருவர் தனது மகள் எங்கு சென்றாலும் அதை கண்காணிக்க, மகளின் தலையில் ஒரு சிசிடிவி கேமராவை பொருத்தியுள்ளார்.
யாழில் அடி காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட குடும்பஸ்தரால் பரபரப்பு ; கொலை செய்யப்பட்டாரா!
யாழில் அடி காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட குடும்பஸ்தரால் பரபரப்பு ; கொலை செய்யப்பட்டாரா!
அதை எங்கிருந்து வேண்டுமானாலும் அவர் தனது மொபைல் போன் மூலமாக 24 மணி நேரமும் கண்காணிக்க முடியும். அந்த பெண் பாகிஸ்தானின் தெருக்களில் தினம்தோறும் தலையில் சிசிடிவி பொருத்திய நிலையில் செல்வது அப்பகுதியில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.
அதை தொடர்ந்து செய்தியாளர் ஒருவர் அந்த பெண்ணை பேட்டி எடுத்தார். அப்போது இவ்வாறாக கேமரா மாட்டியிருப்பது அசௌகரியமாக இல்லையா என்ற கேள்விக்கு பதில் அளித்த அந்த பெண்,
மக்கள் வங்கி ATM இல் பணமெடுத்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி!
மக்கள் வங்கி ATM இல் பணமெடுத்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி!
தனது தந்தை எது செய்தாலும் தனது நலனுக்காகதான் செய்வார் என்றும், அதனால் தந்தையின் முடிவுக்கு தான் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை என்றும் கூறியுள்ளார். தலையில் சிசிடிவி கேமராவுடன் பெண் பேட்டி அளித்த காணொளி வீடியோ வைரலாகியுள்ளது