மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் - பொலிஸ் புலனாய்வாளர்கள் இருவர் கைது!



மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள பொலிஸ் திணைக்களத்தின் விசேட புலனாய்வாளர்கள் இருவர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த கைது நடவடிக்கை நேற்று (25-09-2024) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.


கைது நடவடிக்கை

கள்ளச்சாராய வர்த்தகர்களிம் இருந்து 2000 ரூபாய் இலஞ்சமாக பெற முயன்றபோதே குறித்த இருவரும் கொழும்பிலிருந்து வந்த இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள பண் சேனை , சிலுக்குடியாறு பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதில் ஈடுபடுபவர்களிடம் வாரத்திற்கு ஒருமுறை இலஞ்சம் வாங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இந்த நிலையில், இவர்கள் தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு அளிக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் நேற்றையதினம்(25-09-2024) கொக்கட்டிச்சோலை நகரில் வைத்து இலஞ்சம் வாக்கும் போது, அங்கு மாறுவேடத்திலிருந்த இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


இதேவேளை, கைது செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரிகளை இன்றைய தினம் (26-09-2024) மட்டக்களப்பு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி, மேலதிக விசாரணைகளுக்காக கொழுப்பு கொண்டுசெல்லப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புதியது பழையவை