மதுபோதையில் தேர்தல் பணிகளை செய்த சாரதி கைது!



தெரணிய கலை பிரதேசத்தில் உள்ள வாக்களிப்பு நிலையத்திற்கு பணியாளர்களை அழைத்துச்சென்ற வேன் சாரதி ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலுக்காக வாக்குச் சீட்டுகள், வாக்குப்பெட்டிகள் மற்றும் பணியாளர்களை தெரணியகல பிரதேசத்தில் உள்ள வாக்களிப்பு நிலையத்திற்கு எடுத்துச் சென்ற வேன் சாரதி ஒருவர் கடமையின் போது குடிபோதையில் வெள்ளிக்கிழமை (20-09-2024) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதன்படி, வாக்குச் சீட்டுகள், வாக்குப்பெட்டிகள் மற்றும் பணியாளர்களை வேறு வாகனத்தில் கொண்டு செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்து.
புதியது பழையவை