ஈழத் தமிழர்களின் இயல்பு வாழ்வுக்கான ஐந்தம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, பன்னிரு தினங்கள் உண்ணாநோன்பிருந்து உயிர்துறந்த தியாகதீபம் லெப்.கேணல்.திலீபன் அவர்களின் 37வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, இன்றையதினம் (26-09-2024) கிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக கடைப்பிடிக்கப்பட்டது.
இலங்கைத் தமிழரசுக் கட்சி, கிளிநொச்சி மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில், கட்சியின் கிளிநொச்சி மாவட்ட வாலிபர் முன்னணித் தலைவர் குணபாலசிங்கம் குணராஜ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், நாடாளுமன்ற மேனாள் உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், கரைச்சி பிரதேச சபையின் மேனாள் தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன், விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் சந்தியோகு அலண்டீலன் ஆகியோர் நினைவுரைகளை ஆற்றியிருந்தனர்.
இந்த அஞ்சலி நிகழ்வில் உள்ளூராட்சி மனறங்களின் மேனாள் உறுப்பினர்கள், கட்சியின் அமைப்பாளர்கள், செயற்பாட்டாளர்கள், தமிழ்த்தேசிய ஆர்வலர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.