பாடசாலை வைபவங்களுக்கு அரசியல்வாதிகள் இல்லை



பாடசாலை வைபவங்களுக்கு அரசியல் வாதிகளை அழைக்கும்
சம்பிரதாயத்துக்கு முற்றுப் புள்ளி வைப்பதாக பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி
அமரசூரிய கல்வி அமைச்சில் அதிகாரிகளுடன் நடத்திய கலந்துரையாடல் ஒன்றின்
போது (26) இன்று தெரிவித்தார்.

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை வினாத்தாள் வெளியாதல் தொடர்பில் சுதந்திரமான விசாரணை நடத்தி
பரீட்சை எழுதிய மாணவர்களுக்கு
நியாயத்தை வழங்குமாறு பிரதமர் அதிகாரிகளை பணித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய பிரதமர்
கல்வி அமைச்சு மற்றும் பரீட்சைத் திணைக்களம் தொடர்பில் மக்களுக்கு நம்பிக்கை இல்லை இந்த நம்பிக்கை
மீண்டும் கட்டியெழுப்பப்பட வேண்டும்
உரிய முறையில் பரீட்சை நடத்துதல்
பெறுபேறுகள் வழங்கும் விடயத்தில்
இந்த நிறுவனங்கள் இதனை விட முனைப்புக் காட்ட வேண்டும் ஆசிரிய நியமனங்கள் உட்பட அனைத்து விடயங்களிலும் வெளிப்படைத்தன்மை
காட்டப்படுவதுஅவசியம் எனவும் அவர் அதிகாரிகளுக்குஅறிவுரை வழங்கினார்.
புதியது பழையவை