எல்லோரையும் நேரடி அரசியல் பேசும் துணிவை உருவாக்கிக் கொடுத்துள்ளது அநுரவின் வெற்றி.
வடகிழக்கில் NPP முன்னிறுத்தப் போவதாக கசியவரும் வேட்பாளர்களின் பெயரைப் பார்த்தால், NPP தமிழ் கட்சிகளுக்கு பெரிய தலையிடியாக மாறப்போகிறது என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது. யாரும் எதிர்க்க முடியாத, பொதுமக்கள் இலகுவாக பின்னால் போகக்கூடிய, புதிய ஆளுமையான கல்விமான்களை முன்னிறுத்தும் போகிறது NPP.
சர்வசாதாரணமாக எல்லோரும் தங்கள் விருப்பத்தை சொல்லத் தொடங்குகிறார்கள்.
தாங்கள் விரும்பும் மாற்றம் வராது போனால் , NPP யிற்கே தங்கள் ஆதரவு என சொல்ல தொடங்கி விட்டார்கள்.
தமிழ் கட்சிகள் , எங்களுக்கான சுயாதீன அரசியல் தேவை என்றால் உடனடியாக NPP நிறுத்தப் போகும் இளம் ஆளுமைகளோடு போட்டி போடக்கூடிய புதிய வேட்பாளர்களை அறிமுகம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தல் பொது வேட்பாளர் போல கூட்டம் மேல் கூட்டம் போட்டு இழுத்தடித்தால், அவர்கள் வேட்பாளர்களை அறிவிக்க முன் NPP தன் தேர்தல் பிரச்சாரத்தையே நடத்தி முடிச்சிருக்கும்.
தமிழ் வாக்காளர்களின் கணிசமானோர் NPP யிற்கே தங்கள் வாக்கு என்ற முடிவை எடுத்தும் இருப்பார்கள்.
இது எந்தக் கட்சிக்கும் எதிரான பதிவு அல்ல. உங்கள் கட்சியின் எதிர்காலத்தை தக்க வைக்க விரும்பினால் உடனடியாக பழைய எம்பிகளையும் , மாகாண சபை ஆட்களையும் தவிர்த்து ஆளுமையான புதிய வேட்பாளர்களை உடனடியாக அறிவியுங்கள்.
நீங்கள் அறிவிக்க போகும் வேட்பாளர்களை பொறுத்தே , NPP எத்தனை ஆசனங்களை வடகிழக்கில் வெல்லும் என்பது தீர்மானிக்கப்படும்.