எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் செப்டெம்பர் 30 ஆம் திகதி முதல் ஒக்டோபர் 7 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க அறிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (26-09-2024) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றியபோது ரத்நாயக்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” அண்மையில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலைப் போன்று இத்தேர்தலுக்கும் 2024 வாக்காளர் பட்டியல் பயன்படுத்தப்படும்.
இதனால், ஜனாதிபதித் தேர்தலுக்கு தபால் மூல விண்ணப்பங்களைச் சமர்ப்பித்தவர்கள் இந்தத் தேர்தலில் தபால் மூல வாக்களிப்புக்கு மீண்டும் விண்ணப்பிக்கத் தேவையில்லை” இவ்வாறு தெரிவித்துள்ளார்.