மட்டக்களப்பு ஓந்தாச்சிமடத்தில் பாரிய விபத்து



மட்டக்களப்பு கல்முனை பிரதான சாலையில் சற்றுமுன் பாரிய விபத்துச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. 

மட்டு கல்முனை பிரதான சாலை வழியே மட்டக்ளப்பிலிருந்து ஓந்தாச்சிமடம் நோக்கி பயணித்த முச்சக்கரவண்டியும் கல்முனையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேரூந்துமே  ஓந்தாச்சிமடம் பகுதியில் வைத்து விபத்தில் சிக்கிக்கொண்டுள்ளது. 


இவ் விபத்தில் முச்சக்கரவண்டி முழுமையாக சேதமடைந்திருப்பதுடன் முச்சக்கரவண்டியை செலுத்திச் சென்ற ஓந்தாச்சிமடம் பகுதியை சேர்ந்த நபர் படுகாயமடைந்துள்ளதுடன் மேலதிக சிகிச்சைகளுக்காக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பான விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றன.


புதியது பழையவை