மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேசசபை பிரிவின் தம்பலவத்தை நூலக பின் வீதியில் உள்ள மரத்தில் ஏற்பட்ட தீப்பரவலை போரதீவுப்பற்று பிரதேசசபை ஊழியர்கள் இன்று (01-09-2024)நண்பகல் அளவில் அவதானித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து இத் தீப்பரவல் விடயத்தை பிரதேசசபை செயலாளர் எஸ்.பகீரதன் அவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்ததனை தொடர்ந்து அவரின் பணிப்புரைக்கமைய இன்று(01-09-2024)விடுமுறை நாளாக இருந்தும் பிரதேசசபை உத்தியோகஸ்தர்கள், ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு உடனடியாக சென்று தீப்பரவலை நீர்த்தாரைமூலம் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு முழுமையாக கட்டுப்படுத்தியுள்ளனர்.
இதே போன்று இரு வாரங்களுக்கு முன்னர் போரதீவுப்பற்று பிரதேசத்தின் மண்டூர் துறையடி வீதியில் உள்ள மரமொன்றில் தீப்பரவல் இடம்பெற்றது இதனையும் போரதீவுப்பற்று பிரதேசசபை கட்டுப்படுத்தியது.
பிரதேசசபையின் வாகனங்கள் மற்றும் ஊழியர்களின் உதவிகளுடன் தீயினை கட்டுப்படுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
பொதுமக்கள் வீதியோரங்களில் குப்பைகளை கூட்டி தீ வைப்பதன் காரணமாகவே மரங்களில் தீப்பரவி மின்சார வயர்களில் தீப்பிடித்து மின்சாரம் துண்டிக்கப்படுகின்ற சம்பவங்கள் இடம் பெற்றிருக்கின்றன.
இதற்கு இப் பகுதி பொது மக்களின் அசமந்தப் போக்கே காரணமாகும்.
தீப்பரவலை கட்டுப்படுத்த....
கிராமத்தில் உள்ள கிராமஅபிவிருத்திசங்கங்கள் அமைப்புக்கள் பொது இடங்களில் குப்பைகளை கூட்டி தீ மூட்டுதல் மரங்களில் தீ வைத்தல் போன்றவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.